Free Bible Commentaries

அனைத்து விளக்கவுரைகளும் PDF முறையில் உள்ளன. இலவச Adobe Reader© ஐப் பயன்படுத்தவும்.
 
Sri Lanka Singapore
பழைய ஏற்பாடு
(Old Testament)

புதிய ஏற்பாடு
(New Testament)
யோவான் சுவிசேஷம்
(The Gospel of John)
கலாத்தியர் மற்றும் 1 & 2 தெசலோனிக்கேயர்
(Galatians and 1 & 2 Thessalonians)

சிறப்பு தலைப்புகள்
(Special Topics)
பழைய ஏற்பாட்டு ஆய்வு
(Old Testament Survey)
அவர்களின் வேதவிளக்க கருத்தரங்கு
(Biblical Interpretation Seminar)

ஓய்வுபெற்ற வேதாகம அர்த்த விளக்கவியல் விரிவுரையாளர், கலாநிதி பொப் அட்லியின் வியாக்கியான விளக்கவுரைகள், கற்கை நெறி வழிகாட்டி வடிவத்தில் எழுதப்பட்டுள்ளது.
 
இந்த இலவச வேதாகம கற்கை நெறி இணையத்தளமானது வேதாகமத்தின் தனித்துவமான அருட்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இதுவே விசுவாசத்திற்கான (இரட்சிப்பு) ஒரே மூலாதாரம் மற்றும் பயிற்சியாகும் (கிறிஸ்தவ வாழ்க்கை). வேதாகமத்தை மொழிபெயர்பதற்கான திறவுகோல் என்பது அதன் மூல எழுத்தாளரின் நோக்கத்தைக் கண்டறிவதாகும்: (1)தேர்வு வகைகள், (2) இலக்கியப் பிண்ணனி, (3) இலக்கணத் தெரிவுகள், (4) வார்த்தை தெரிவுகள், (5) எழுத்தாளரினதும் எழுத்தாக்கத்தினதும் வரலாற்று பின்னணி மற்றும் (6) ஒத்திசையான பகுதிகள் (அருளப்பட்ட புத்தகத்தின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் அருளப்பட்ட புத்தகமேயாகும். வேதாகமம் சத்தியத்தின் நூலகமாகும்.)
 
எழுத்தாளர் வியாக்கியானவியலில் (வேதாகம மொழிபெயர்ப்பு) கல்விசார் பயிற்சிப் பெற்றவராயிருக்கின்றார். (அவருடைய சுயவிவரம் மற்றும் விசுவாச அறிக்கையில் பார்க்கவும் (www.freebiblecommentary.org) அவர் முயற்சிப்பதாவது:
  1. உங்களுக்காக வேதம் வசிப்பதற்கு உங்களை உற்சாகப்படுத்தவும் .( உங்களுக்கும் வேதாகமத்துக்கும் பரிசுத்த ஆவிக்குமே முன்னுரிமை உண்டு)
  2. உங்களது புரிந்து கொள்ளலை நீங்கள் மதிப்பிட உதவுவதோடு மற்ற மொழிபெயர்ப்பின் தெரிவுகளையும் வழங்குகிறது.
  3. மூலநோக்கம் (அதாவது ஒரு அர்த்தம்) கண்டறியப்பட்டவுடன் அவை கலாச்சார அமைப்புக்கும் வாழ்க்கைக்கும் ஏற்ப பிரயோகப்படுத்தப்பட வேண்டும்! பல பிரயோகப்படுத்தும் சாத்தியக்கூறுகள் காணப்படினும் எழுத்தாளரின் நோக்கம் ஒன்றே ஆகும்.
  4. வியாக்கியானக் கோட்பாடுகள் வார்த்தையின் அர்த்தத்தை உறுதியாகக் கூறுவதில்லை , ஆனால் வார்த்தை எதைக் குறிப்பிடவில்லை என்பதை தீர்மானிக்க உதவும்!
  5. வியாக்கியானம் என்பது ஒருவரின் வேதாகமாக் கற்கையின் போது கவனிக்க வேண்டிய விஷயங்களைப் பற்றிய ஒரு பட்டியல் ஆகும். மொழிபெயர்ப்பின் ஒவ்வொரு அம்சமும் அத்தியாவசியமானது ஆனாலும் நவீன வேதாகம மொழிபெயர்ப்பாளர்கள் கேள்விகளை மாத்திரமே கேட்கிறார்கள், "இந்த வார்த்தை எனக்கு எப்படி அர்த்தம் தருகின்றது? சிறந்த கேள்வி என்னவெனில் "மூல எழுத்தாளர் (ஒரே அருளப்பட்ட நபர்) அவரது/அவளது நாட்களுக்கு கூறியது யாது?" மற்றும் அந்த சத்தியம் என்னுடைய நாட்களுக்கு எப்படிப் பிரயோகப்படுத்தப்படும்?
என்னுடைய வேதாகம வியாக்கியான கருத்தரங்கு ஆசீர்வாதமாக இருக்கும் எனவும் வசனம் வசனமான விளக்கவுரை தேவனிடம் எம்மை கிட்டி சேர்க்கும் எனவும் நம்புகின்றேன்.

கலாநிதி பொப் அட்லி
வேதாகம அர்த்த விளக்கவியல் விரிவுரையாளர் (ஓய்வுபெற்ற)
www.freebiblecommentary.org
www.biblelessonsintl.com
 
Copyright © 2016 Bible Lessons International, P.O. Box 1289, Marshall, TX 75671, USA